செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

மீண்டும் சந்தித்தோம்! 16



குளியல் துறையில் நான் படமெடுத்துக் கொண்டிருந்தபோது, என்னைப்போல் மாற்றுடை கொண்டு வராதால் குளிக்க முடியாத நண்பர்களும் வந்து என்னோடு சேர்ந்துகொண்டனர்.


திருமதி சகுந்தலாஅய்யம்பெருமாள் அவர்களும் அவரது I Pad இல் அந்த குளியல் துறையிலிருந்து காவிரியை படம் எடுத்தார் அவைகள் கீழே.







பின்பு  எங்களை தனித்தனி குழுவாக நிற்க சொல்லி படம் எடுத்தார். அவைகள் கீழே



பின்பு சில நண்பர்கள் தங்கள் துணைவியாருடன் நின்று புகைப்படம் 
எடுத்துக்கொண்டனர்.

(இன்னும் நிறைய படங்கள் இருந்தாலும் அவைகளை இங்கு பதிவேற்றவில்லை)

திருமதி சகுந்தலா அய்யம்பெருமாள் எங்களை நிற்கவைத்து புகைப்படம் 
எடுத்த இதே இடத்தில் 1991 இல் குடும்பத்தோடு வந்து, காலஞ்சென்ற 
என் அண்ணன் முனைவர் வே.சிவசுப்ரமணியன் அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்டது நினைவுக்கு வந்தது.

காலங்கள் மாறினால், காட்சியும் மாறும் கோலங்களும் மாறும் என்பதை கீழே தந்துள்ள அந்த படம் சொல்லும்.







பிறகு பரிசலில் போய் வரலாமா என கேட்டபோது மூவரைத்தவிர
மற்றவர்கள் எல்லாம் நம்மால் இந்த வயதில் சுமார் ஒரு மணி நேரம் 
பரிசலில் சம்மணம்போட்டுஉட்கார்ந்து வர முடியாது. என்று 
சொல்லிவிட்டனர். அந்த மூன்று நண்பர்களும் தங்கள் 
துணைவியார்களுடன் வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது!

சரி அருவியை பரிசலில் சென்று தான் பார்க்கப் போவதில்லை. காவிரியின் அக்கரைக்கு சென்றாவது பார்க்க முடியுமா  என விசாரித்தபோது அருகில் 
உள்ள தொங்கு பாலத்தில் ஏறி ஆற்றைத் தாண்டினால் Cini Falls பார்க்கலாம் என்றார்கள். அது என்ன Cini Falls அதையும் பார்த்து வருவோமே என்று 
அதைக் காண சென்றோம்.


தொடரும்



 
 




20 கருத்துகள்:

  1. துணை இல்லை என்றால் பரிசலில் என்ன...? எங்கும் தவம் செய்யலாம் என்று நினைக்கிறேன்...! ஹிஹி...

    படங்கள் அனைத்தும் அருமை ஐயா...

    முடிவில் உள்ள படம் பலவற்றை யோசிக்க வைக்கிறது... ம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

      நீக்கு
  2. இல்லத்தரசி அருகில் இல்லையென்றால் எல்லோரும் தைரியசாலிகளே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பலருக்கும் தெரிந்த உண்மையை வெளிப்படையாக சொன்னதற்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!

      நீக்கு
  3. புகைப்படங்கள் அருமை! அந்த மூன்றாவது, நான்காவது படங்கள் (பொங்கி வரும் புதுப்புனல்) தூரிகை கொண்டு வரைந்த ஓவியம் போல அழகாக உள்ளன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கும்,கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி தி.தமிழ் இளங்கோ அவர்களே! நீங்கள் சொன்னதுபோல் படங்களை வெளியிட்டுள்ளேன். நீங்கள் குறிப்பிட்ட படங்களுக்கான பாராட்டுக்களை பெறவேண்டியவர் திருமதி அய்யம்பெருமாள் அவர்களே!

      நீக்கு
  4. ஏற்கனவே நன் ஹொகனேகல் போய் வந்திருந்தாலும் பல இடங்களைப் புதிதாகப் பார்ப்பது போல் இருக்கிறது அருமையான படங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு G.N.பாலசுப்ரமணியம் அவர்களே!

      நீக்கு
  5. கடல், நட்சத்திரங்கள், அருவி போன்றவைகளை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காமல் பார்த்துக்கொண்டிருக்க முடியும். புகைப்படங்கள் அருமை.

    என் மகன், என் மகளுக்கு பல் விழுந்தபொழுது அழுதான். அவளுக்கு பல் விழுந்தால், நீ ஏன் அழுகிறாய் என்று கேட்டதற்கு, நான் பெரியவனானதும் எனக்கும் விழுமே என்று அழுகிறேன் என்றான். பழைய, புதிய புகைப்படங்களைப் பார்த்தால் அவன் அழுதது ஏன் என்று புரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! பழைய மற்றும் புதிய படங்களைப் பற்றிய தங்களது கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  6. பொங்கி வரும் காவிரியை காணும்போது மகிழ்ச்சி .
    நினைவுப் பகிர்வுகள் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!

      நீக்கு
  7. படங்கள் அத்தனையும் அருமை. ஐ பேடில் எடுக்கும்போது அதிக பரப்பளவை cover செய்ய முடிகிறது. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே!








      நீக்கு
  8. புகைப்படங்கள் அருமை! அழகோடு ஆபத்தும் கலந்திருப்பது போன்ற உணர்வைத்தருகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி மனோ சாமிநாதன் அவர்களே!

      நீக்கு
  9. பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

      நீக்கு
  10. அருமையான படங்கள்... cini falls பார்க்க நானும் ஆவலாய்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! பொறுத்திருங்கள். Cini falls வந்து விழும் அடுத்த பதிவுகளில்!

      நீக்கு