சனி, 25 செப்டம்பர், 2010

நினைவோட்டம் 29

அப்போதெல்லாம் ஆங்கில பாடம் சொல்லிக்கொடுக்கும்
ஆசிரியர்கள் வகுப்பு ஆசிரியராக இருப்பார்கள்.
அவர்கள் ஆங்கிலம் அல்லாமல் வேறொரு பாடமும் எடுப்பார்கள்.

அப்படி எங்களுக்கு ஒன்பதாம் வகுப்பு ஆசிரியராக இருந்த
M.R.G என அன்புடன் அழைக்கப்பட்ட திரு.M.R.கோவிந்தசாமி அவர்கள்,
ஆங்கிலத்தோடு சமூகவியல் (Social Studies ) பாடமும் நடத்தினார்.

அவருடைய வகுப்பு என்றாலே எங்களுக்கு சந்தோஷம் தான். ஆங்கில படத்தையும், சமூக பாடத்தையும் எல்லோருக்கும் புரியும் வண்ணம் நகைச்சுவையோடும்,உவமையோடும் அவர் நடத்தியதால்,அவரது வகுப்புகளை எவரும் தவற விட்டதில்லை.

சமூக இயல் பாட வகுப்பு என்றால், அநேகருக்கு நான் முன்பே சொன்னதுபோல் அது எட்டிக்காய்தான்.
அந்த பாடத்தில் வரும் வரலாற்று சம்பவங்களையும் அது நடைபெற்ற வருடங்களையும், தேதிகளையும் நினைவில்
இருத்தி தேர்வை எதிர்கொள்வது கடினமாக இருந்ததுதான் காரணம்.

எட்டாம் வகுப்பில் எப்படி எங்கள் ஆசிரியர் திரு E .C. நாத் அவர்கள் சமூகவியல் பாடத்தை சுவைபட நடத்தி விரும்பச்செய்தாரோ,அது போல
திரு M.R.G அவர்கள் சிரிக்க சிரிக்க பேசி அந்த பாடத்தின் மேல் ஒரு விருப்பத்தை உண்டாக்கினார் என்பதே நிஜம்.

இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்டபோது, இருந்த கவர்னர் ஜெனெரல்கள் பெயர்களையும்,அவர்கள் கொண்டுவந்த சீர்திருத்தம் அல்லது சட்டங்களின் பெயர்களையும் நினைவில் வைத்துக்கொள்ள சிரமப்பட்டபோது,
திரு.M.R.G அவர்கள் அவைகளை நினைவில் வைக்க மிக
சுலபமான வழிகளை சொன்னது இன்னும் எனக்கு நினைவுக்கு வருகிறது.

அப்போது இருந்த சமஸ்தானங்களின்(Princely states)
குறுநில மன்னர்களுக்கு வாரிசு இல்லாமல் இருந்து
இறந்தால்,அவர்களுக்கு பின் அந்த சமஸ்தானங்களை
ஆள குடி மக்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு
முடிசூட்டுவது வழக்கமாக இருந்தது.

இதை ஒழிப்பதற்காக, அப்போது இருந்த கவர்னர் ஜெனெரல் ஒருவர் அந்த சமஸ்தானங்களை கையகப்படுத்தி,அவைகளை ஆங்கிலேய ஆட்சியின் கீழ் கொண்டு வர ஏற்படுத்தியதுதான் Doctrine of lapse
எனப்படும் தத்து எடுப்பதை தடுக்கும் திட்டம்.

அந்த திட்டத்தை கொண்டுவந்தது யார் என்பதை நினைவில் இருத்த எங்கள் M.R.G அவர்கள் சொன்னது ....?

2 கருத்துகள்:

  1. இது போன்ற சுலப வழிகள் கற்பித்த ஆசிரியர்களையும் மறக்காமல் நினைவிருத்தச் செய்பவை..

    எம் . ஆர். ஜி அவர்களின் வழிமுறை அறிய ஆவலாய் உள்ளேன்.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் ,கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! திரு எம்.ஆர்.ஜி‌ போன்ற ஆசிரியர்கள் என்றும் எங்கள் நினைவில் இருப்பார்கள். ஏனெனில் படித்த பாடத்தை எப்படி நினைவில் நிறுத்துவது என்று சொல்லிக்கொடுதவர்கள் அல்லவா? அவர் சொல்லிக்கொடுத்த முறை அடுத்த பதிவில் பார்ப்பீர்கள்.

      நீக்கு